/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டில்லியில் பனிமூட்டம் விமான சேவையில் சிக்கல்
/
டில்லியில் பனிமூட்டம் விமான சேவையில் சிக்கல்
ADDED : ஜன 05, 2025 12:09 AM
சென்னை?:டில்லியில் நிலவும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
டில்லி, பெங்களூரில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், விமானங்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல், தாமதமாகின்றன. விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று டில்லி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள தாமதமாக புறப்பட்டன. இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து டில்லிக்கு காலை 2:30 மணி, 4:20, 4:30, 5:55, 8:00 மணிக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. காலை 7:15 மணி, 10:00 மணிக்கு டில்லியில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பெங்களூரில் இருந்து காலை 4:00 மணி முதல் காலை 9:30 மணி வரை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் வரவேண்டிய விமான சேவைகள் தாமதமானதாக, சென்னை விமான நிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.