/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மாஜி' விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற அழைப்பு
/
'மாஜி' விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற அழைப்பு
ADDED : ஜூலை 20, 2025 11:41 PM
சென்னை:சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த நலிந்த நிலையில் உள்ள, முன்னாள் விளையாட்டு வீரர்கள், மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, தற்போது நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு, மாத ஓய்வூதியமாக 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது.
மேலும், முதியோருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
விண்ணப்பதாரர்கள் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பெற்றிருக்க வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம், 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம், https://sdat.tn.gov.in என்ற இணையத்தில் அல்லது நேரு பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்று, இம்மாதம் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு 74017 03480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

