/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரி அண்ணா நகரில் கைது
/
மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரி அண்ணா நகரில் கைது
ADDED : டிச 27, 2024 08:52 PM
அண்ணா நகர்:போலி சான்றிதல் வழக்கு தொடர்பாக, சென்னை அண்ணா நகரில் தங்கியிருந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, ஹரியானா போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
அண்ணா நகர், 10வது பிரதான சாலையில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன், 68; ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இவர், 2012ல் ஹரியனா மாநிலம், பஞ்ச்குலா பகுதியில், கல்வித்துறை செயலராக பணிபுரிந்துள்ளார். அப்போது, போலி சான்றிதழ் வழங்கியது தொடர்பாக அம்மாநில போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து வழக்கு பதிந்த பஞ்ச்குலா போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க, ஹரியானா போலீசார், அண்ணா நகர் போலீசார் அனுமதியுடன், ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு நேற்று காலை வந்தனர். பல மணிநேர விசாரணைக்கு பின், ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். நேற்று மாலை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 'வழிகாவல் வாரண்ட்' பெற ஆஜர்படுத்தி, ஹரியானா மாநிலத்திற்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.

