/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி கொலை வழக்கில் மேலும் நால்வர் கைது
/
ரவுடி கொலை வழக்கில் மேலும் நால்வர் கைது
ADDED : ஏப் 23, 2025 12:38 AM
வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடி, உதயசூரியன் நகர், 11 வது பிளாக்கை சேர்ந்தவர் ராஜ் என்ற தொண்டை ராஜ், 40; ஆட்டோ ஓட்டுனர் . பிரபல ரவுடியான இவர் கடந்த 20ம் தேதி மாலை, 5:00 மணியளவில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலை, 4வது தெருவில் நடந்து சென்ற போது, மறைந்திருந்த கும்பல், அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.
அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன், 26, அஜய்குமார், 26, பல் அஜித், 22, ஆகிய மூவரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ராஜசேகர், 28; வியாசர்பாடி கரண், 28 நரேஷ், 21, கொடுங்கையூர் யோகேஷ், 28 ஆகிய நால்வரை நேற்று கைது செய்தனர்.

