/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாடகைக்கு வாங்கிய 10 கார்களை அடகு வைத்த மோசடி நபர் கைது
/
வாடகைக்கு வாங்கிய 10 கார்களை அடகு வைத்த மோசடி நபர் கைது
வாடகைக்கு வாங்கிய 10 கார்களை அடகு வைத்த மோசடி நபர் கைது
வாடகைக்கு வாங்கிய 10 கார்களை அடகு வைத்த மோசடி நபர் கைது
ADDED : ஜூன் 12, 2025 12:19 AM
பூந்தமல்லி, பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, மேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர், 38. இவர் மீது, சில நாட்களுக்கு முன், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
அதில், கார்களை வாங்கி கொடுத்தால், ஐ.டி., நிறுவனங்களில் இணைத்து ஓட்டி, மாதம் குறிப்பிட்ட தொகை தருவதாக கூறியதின்படி, அந்த பகுதியைச் சேர்ந்த நபர்கள், 10க்கும் மேற்பட்ட புது கார்களை வாங்கி, ராஜசேகரிடம் கொடுத்துள்ளனர்.
சில மாதங்கள், கார் உரிமையாளர்களுக்கு, ராஜசேகர் முறையாக வாடகை பணம் கொடுத்துள்ளார். அதன்பின், பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இது தொடர்பாக விசாரித்தபோது, கார்களை அடமானம் வைத்து, மோசடி செய்தது தெரியவந்தது.
இப்புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், ராஜசேகர் ஐ.டி., நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்துள்ளார். அப்போது, தெரிந்தவர்களிடம் கார்களை வாங்கி கொடுத்தால், நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, 10க்கும் மேற்பட்டோர் கார்கள் வாங்கி கொடுத்துள்ளனர். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், அந்த கார்களை அடமானம் வைத்து, சரிகட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து, ராஜசேகரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மூன்று கார்கள் பறிமுதல் செய்த போலீசார், மீதமுள்ள கார்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.