sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 அரசு வக்கீல் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

/

 அரசு வக்கீல் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

 அரசு வக்கீல் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

 அரசு வக்கீல் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு


ADDED : டிச 29, 2025 06:59 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கான தேர்வுக்கு, இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

மனிதநேய ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தின் தலைவர் சைதை துரைசாமி மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர்கள் நிலை இரண்டு என்ற பணியில், 61 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்பணியில் சேர்வதற்கு, சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகம்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இணைந்து, ஜன., 5ல் இருந்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

விண்ணப்பிக்க விரும்புவோர், ஜன., 4ம் தேதி வரை, எண்: 28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி., நகர், சென்னை - 35 என்ற முகவரியில் செயல்படும், மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகத்திற்கு, புகைப்படத்துடன் நேரில் வந்து பதிவு செய்யலாம்.

அதேபோல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை பதிவு செய்யலாம்.

மேலும், தகவல்களுக்கு, 044 - 2435 8373; 2433 0952; 2535 2593 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 98404 39393; 84284 31107 ஆகிய மொபைல் போன் எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us