/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகன் திட்டிய விரக்தி: கோவில் குளத்தில் குதித்து தாய் தற்கொலை
/
மகன் திட்டிய விரக்தி: கோவில் குளத்தில் குதித்து தாய் தற்கொலை
மகன் திட்டிய விரக்தி: கோவில் குளத்தில் குதித்து தாய் தற்கொலை
மகன் திட்டிய விரக்தி: கோவில் குளத்தில் குதித்து தாய் தற்கொலை
ADDED : அக் 30, 2025 03:57 AM

மாதவரம்: மகன் திட்டிய விரக்தியில், கோவில் குளத்தில் குதித்து தாய் தற்கொலை செய்தது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாதவரம், சீதாபதி நகர் 15வது தெருவைச் சேர்ந்தவர் ரேவதி, 56. இவரது கணவர் உடல்நிலை சரியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
மகன் திவாகர், 26, மற்றும் மருமகளுடன் ரேவதி வசித்து வந்தார். இந்நிலையில், மாமியாருக்கும், மருமகளுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மனைவிக்கு ஆதரவாக செயல்பட்ட மகன் திவாகர், தாயை திட்டியதாகவும், தனியாக வீடு எடுத்து வசிக்கும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரேவதி, நேற்று முன்தினம் இரவு மாதவரம் சீனிவாசா கோவில் தெருவில் உள்ள கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை அவரது உடல் குளத்தில் மிதந்துள்ளது. தகவலறிந்த மாதவரம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.