/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேலையூரில் தொடர் திருட்டு ஆறு பேர் கும்பல் சிக்கியது
/
சேலையூரில் தொடர் திருட்டு ஆறு பேர் கும்பல் சிக்கியது
சேலையூரில் தொடர் திருட்டு ஆறு பேர் கும்பல் சிக்கியது
சேலையூரில் தொடர் திருட்டு ஆறு பேர் கும்பல் சிக்கியது
ADDED : நவ 14, 2025 11:57 PM
சேலையூர்: சேலையூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தில், சில நாட்களுக்கு முன், ஒரே இரவில் தபால் நிலையம், மளிகை கடை, போட்டோ ஸ்டுடியோ, அடகு கடைகளை உடைத்து திருடப்பட்டன. சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், திருப்போரூரில் இருந்து திருட்டு சம்பவத்தை துவங்கியது தெரியவந்தது. திருப்போரூரில் பைக்கை திருடிய மர்ம நபர்கள், அங்கிருந்து பொன்மாரில் உள்ள பெட்ரோல் 'பங்க்'கிற்கு சென்று, ஊழியரை தாக்கி பணம் பறித்துள்ளனர்.
அங்கிருந்து மாடம்பாக்கம் சென்றபோது, பெட்ரோல் இல்லாமல் பைக் நின்றதால், மற்றொரு வாகனத்தை திருடி கும்பலாக சென்று திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
கடைசியாக, இரண்டு பைக் மற்றும் ஒரு காருடன் தப்பிய திருடர்கள், திருடிய நகை, பணத்தை பிரித்துக்கொண்டு, இ.சி.ஆரில் அறை எடுத்து, மது அருந்தி ஜாலியாக செலவு செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக, சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, 19 என்பவரை, நேற்று முன் தினம் கைது செய்தனர்.
அதேநேரத்தில், இந்த தொடர் திருட்டு சம்பவம் தொடர்பாக, கண்ணகி நகரில் ஒருவரும், தாளம்பூர் காவல் நிலையத்தில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

