/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய மகளிர் கால்பந்து தமிழக அணி அறிவிப்பு
/
தேசிய மகளிர் கால்பந்து தமிழக அணி அறிவிப்பு
ADDED : நவ 14, 2025 11:57 PM
சென்னை: ஆந்திர மாநிலத்தில் நடக்க உள்ள தேசிய மகளிர் ஜூனியர் கால்பந்து போட்டிக்கான தமிழக அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அகில இந்திய கால்பந்து சங்கம் மற்றும் ஆந்திர மாநில கால்பந்து சங்கம் இணைந்து, மகளிருக்கான 'தேசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் டையர் - 1' போட்டி, ஆந்திர மாநிலத்தின் அனந்தபூரில், வரும் 18ல் துவங்கி அடுத்த மாதம் 7ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதில், 16 மாநில அணிகள் பங்கேற்கின்றன. இதன் 'ஏ' பிரிவில் ஆந்திரா, ராஜஸ்தான், அருணாசல பிரதேசம் அணிகளோடு, தமிழக அணி இடம் பிடித்துள்ளது.
இதற்கான பயிற்சி முகாம், கடந்த 6ம் தேதி துவங்கியது. இதில் சிறப்பாக செயல்பட்ட 20 வீராங்கனையர், தமிழக அணியில் இடம்பெற்றுள்ளனர். தமிழக அணி, இன்று ஆந்திரா புறப்படுகிறது.
வீரர்கள் விபரம்:
அணியின் கோல் கீப்பராக ஸ்ரீநிதி, ஹரிப்ரியா; தடுப்பு ஆட்டக்காரர்களாக நேத்ராலட்சுமி, மகாலட்சுமி, த்ரிஷா, சோபிகா ஸ்ரீ, மவுவிகா ஸ்ரீ, ஐஸ்வர்யா, பாலதிவ்யா; மிட் திசையில் நயானா, சஹானா, சோபிகா செல்லமாள், பிரபா, ரித்திகா, ஆனந்தி; பார்வர்ட் திசையில் துர்கா, அன்விதா, தர்ஷிகா, தர்ஷினி, சஹானா ஆகியோர் அணியில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

