/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நொளம்பூர் சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பை
/
நொளம்பூர் சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பை
ADDED : ஏப் 14, 2025 01:33 AM

நொளம்பூர்:வளசரவாக்கம் மண்டலம், 143 வது வார்டு நொளம்பூரில் சர்வீஸ் சாலை அருகே எம்.சி.கே லேஅவுட் 1 வது பிரதான சாலை உள்ளது.
இச்சாலையோரம் அப்பகுதி மற்றும் மாநகராட்சியை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பை கொட்டப்படுகிறது.
மேலும், கட்டட கழிவுகள், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
அத்துடன், அப்பகுதியில் மலைபோல குப்பை குவிந்துள்ளது. சிலர் குப்பையை தீயிட்டுக் கொளுத்துகின்றனர்.
குப்பை குவியலில் உள்ள கழிவுகளை உண்ண வரும், பசு மாடு மற்றும் நாய்களால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

