/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிங்கிள் காலம் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
/
சிங்கிள் காலம் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
ADDED : மே 09, 2025 01:03 AM
புளியந்தோப்பு,
பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள ஈஸ்வரி திருமண மண்டபத்தில், நேற்று காலை, 17 வயது சிறுமிக்கு இளங்கோ, 24, என்பவருடன் திருமணம் நடக்க இருந்தது.
இதுகுறித்து, குழந்தை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஸ்டெல்லாவுக்கு, 1098 என்ற தொலைபேசி எண் வாயிலாக, தகவல் கிடைத்தது.
உடனே, சம்பவ இடம் சென்ற அதிகாரிகள், திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து, புளியந்தோப்பு சரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, போலீசாரும் அதிகாரிகளும், இரு வீட்டாரிடமும் விசாரித்து வருகின்றனர்.
குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி, கெல்லீஸ் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.