UPDATED : அக் 20, 2026 08:47 PM
ADDED : அக் 20, 2026 08:44 PM
பெற்றோர் பேட்டி
பெற்றோர் பேட்டி:
* பி.மோகனகிருஷ்ணன், 31, கோடம்பாக்கம்: இங்கு வந்த என் மகனுக்கு அரிச்சுவடி ஆரம்பித்தது, நல்ல அனுபவமாக இருந்தது. ஆரம்பத்தில் வடபழனி கோவிலில் பங்கேற்க முயற்சித்தோம். ஆனால், அங்கு முன்பதிவு முடிந்து விட்டதால், இங்கு வந்து பங்கேற்றோம். அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தன.
* எல்.பாலசுப்பிரமணியன், 33, பூந்தமல்லி: என் தந்தை லோகநாதன், எஸ்.பி.ஐ., வங்கி, ஐதராபாத்தில் பணிபுரிகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பேரனுடன் பங்கேற்க விரும்பி, இன்று சென்னை வந்துள்ளார். என் தந்தை ‘தினமலர்’ வாசகர். நாளிதழில் வந்த அறிவிப்பை தொடர்ந்து, முன்பதிவு செய்து, இதில் பங்கேற்க குடும்பத்துடன் வந்தோம்.
* எச்.அனிதா, 33, அம்பத்துார்: இங்கு குழந்தைகளுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன. வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன், என் குழந்தைக்கு அரிச்சுவடி ஆரம்பித்து வைத்தது, பாக்கியமாக கருதுகிறேன்.
* எச்.ரபிக், 40, பொன்னேரி: ‘தினமலர்’ நாளிதழில் வந்த செய்தி மற்றும் அறிவிப்பை தொடர்ந்து, இங்கு என் மகனுடன் வந்து, அரிச்சுவடியை நல்ல நாளில் துவக்கியுள்ளோம். சிறப்பான ஏற்பாடுகளை செய்த, ‘தினமலர்’ மற்றும் வேலம்மாள் பள்ளிக்கு வாழ்த்துக்கள்.
‘‘குழந்தைகளின் கல்வி தொடக்கத்திற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி, உண்மையிலேயே சிறப்பு. டீ சர்ட் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து, பள்ளிக்கு பயப்படாமல் செல்ல வேண்டும் என்பதை துாண்டும் வகையில், இந்த நிகழ்ச்சி இருந்தது.
– முகமது இஸ்மாயில்,
மடிப்பாக்கம்.
‘‘பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறோம். ஆயுத பூஜை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தோம். அதேநேரத்தில், கிழக்கு தாம்பரத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடப்பதை கேள்விப்பட்டு, பதிவு செய்து, குழந்தையை அழைத்து வந்தோம். ‛அ’னா, ‛ஆ’ வன்னா எழுதி ஆரம்பிச்சு வைத்தது சந்தோஷமாக இருந்தது. பயனுள்ளதாக அமைந்ததாக உணர்கிறோம்.
– பாலாஜி,
ராஜகீழ்ப்பா்கம்.
‘‘பள்ளிக்கு செல்ல குழந்தைகள் பயப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு காலையில் வரும்போதே குழந்தை பயந்துகொண்டே வந்தான். ஆனால் இங்கு, ‘டி– ஷர்ட் – லேர்னிங் கிட்’ கொடுத்ததை பார்த்து சந்தோஷமாகிவிட்டான். ‛அ’னா, ‛ஆ’ வன்னா எழுதி ஆரம்பிச்சு வைத்தது சந்தோஷமாக உள்ளது. பள்ளிக்கு பயப்படாமல் செல்வான் என்று நம்புகிறோம்.
– தமிழரசி,
குரோம்பேட்டை.
‘‘இந்த நிகழ்ச்சிக்கு, என் பேரனை அழைத்து வந்தேன். இந்த நிகழ்ச்சி மூலம் கல்வி மட்டுமின்றி அனைத்தையும் அவன் வளர்த்துகொள்ள வேண்டும் என்பதற்காக அழைத்து வந்தோம். ‘தினமலர்’ நாளிதழுக்கு நன்றி. குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தனர். இதை தொடர்ந்து நடத்த வேண்டும்.
கிருஷ்ணமூர்த்தி,
மாடம்பாக்கம்.
