UPDATED : அக் 20, 2026 08:16 PM
ADDED : அக் 20, 2026 08:14 PM

அ நிறம் | அளவு
‘‘சென்னையில் அதிகனமழையின்போது சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. காலநிலை மாற்றம் காரணமாக, வடகிழக்குப் பருவமழை, அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.
களப் பணியாளர்களும், அலுவலர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மழையால் எதிர்பாராத இடங்களில் தண்ணீர் தேங்கியதால், அப்பகுதிகளில் உள்ள சவால்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர், மழைக்கால பணிகளுக்கான வழிகாட்டுதல்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை, 78 ஆயிரத்து, 161 மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில், 731 மரக்கிளைகள் அகற்றப்பட்டன.
– சமீரன்,
மாநகராட்சி கமிஷனர்.
