/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஞானசேகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்
/
ஞானசேகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்
ADDED : ஜன 21, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில்,மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன், 37 கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்து, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு, நீதிமன்றம் சார்பில் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், ஞானசேகரனை வரும், 26ம் தேதி வரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

