ADDED : நவ 21, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,
நகர்ப்புற பசுமை பகுதிகள் உருவாக்கும் திட்டத்தின் கீழ், தாம்பரம் மாநகராட்சியில், பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொரு மண்டலத்திலும், 2,300 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
மண்டலம்-1ல், கல்மடுவு, சங்கர் நகர் 19வது தெரு; மண்டலம்-2ல், சுபம் நகர், 200 அடி சாலை; மண்டலம்-3ல், சரவணா நகர், ஜெயந்திரர் நகர்; மண்டலம்-4ல், எப்.சி.ஏ., நகர் பூங்கா 1, 2; மண்டலம் -5ல், சீரடி சாய்பாபா நகர் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த இடங்களில் தலா, 2,300 மரக்கன்றுகளை நட்டு, பசுமை பரப்பை அதிகரிக்கும் பணியை, இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

