/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டல கிரிக்கெட் பைனலில் குருநானக் கல்லுாரி த்ரில் வெற்றி
/
மண்டல கிரிக்கெட் பைனலில் குருநானக் கல்லுாரி த்ரில் வெற்றி
மண்டல கிரிக்கெட் பைனலில் குருநானக் கல்லுாரி த்ரில் வெற்றி
மண்டல கிரிக்கெட் பைனலில் குருநானக் கல்லுாரி த்ரில் வெற்றி
ADDED : டிச 31, 2025 05:10 AM

சென்னை: சென்னை பல்கலைக்கு உட்பட்ட மண்டல கிரிக்கெட் போட்டியில், வேளச்சேரி குருநானக் கல்லுாரி அணி 'சாம்பியன்' கோப்பையை வென்றது.
சென்னை பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளை இரு மண்டலங்களாக பிரித்து, விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. அந்தவகையில் 'ஏ' பிரிவில் இறுதி போட்டி, வேளச்சேரியில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், லயோலா மற்றும் குருநானக் கல்லுாரி அணிகள் மோதின. டாஸ் வென்ற லயோலா கல்லுாரி அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த, குருநானக் கல்லுாரி அணி, நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் அடித்தது.
அணி கேப்டன் சஞ்சய், பொறுப்புடன் விளையாடி ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணையாக சச்சின் ஸ்ரதேவ் சண்முகவேல், சிறப்பாக ஆடி 77 ரன்கள் சேர்த்தார். சுனில் கிருஷ்ணா, 44 ரன்களும், ஆர்.கே.ஜெயந்த், 51 ரன்களும் அடித்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
லயோலா தரப்பில் கேவின் ரோமாரியோ, மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இலக்கை துரத்திய லயோலா அணி, 39.4 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அணியின் வீரர் வபார், அதிரடியாக விளையாடி, 91 ரன்களை குவித்தும் பயனில்லாமல் போனது.
இதனால், 10 ரன்கள் வித்தியாசத்தில், குருநானக் கல்லுாரி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

