/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மக்களின் கவனத்தை ஈர்க்கும் 'குரு சிஷ்யா' ஓவிய கண்காட்சி
/
மக்களின் கவனத்தை ஈர்க்கும் 'குரு சிஷ்யா' ஓவிய கண்காட்சி
மக்களின் கவனத்தை ஈர்க்கும் 'குரு சிஷ்யா' ஓவிய கண்காட்சி
மக்களின் கவனத்தை ஈர்க்கும் 'குரு சிஷ்யா' ஓவிய கண்காட்சி
ADDED : டிச 26, 2024 12:29 AM

சென்னை, நுங்கம்பாக்கம் ஆர்ட் ஹவுசில் நேற்று முன்தினம், 'குரு -- சிஷ்யா' எனும் தலைப்பில், ஓவிய விற்பனை கண்காட்சி நடந்து வருகிறது.
கண்காட்சியை நேற்று முன்தினம், திரைப்பட நடிகர் நாசர் துவக்கி வைத்தார். கண்காட்சி, 29ம் தேதி வரை, காலை ௧௧:௦௦ மணி முதல் மாலை ௭:௦௦ மணி வரை நடைபெறும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.
இங்கு, ஓவியர் திருநாவுக்கரசு மற்றும் அவரது மாணவர்களான கிருபானந்தம், விஜயகாந்த், பாரதிராஜா ஆகியோரின், 100 ஓவியங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, ஓவியர் திருநாவுக்கரசு கூறியதாவது:
நான், 1999ல் கும்பகோணம் கவின் கலைக்கல்லுாரியில் முதுகலை ஓவியம் முடித்தேன். பல்வேறு கல்லுாரிகளில் விரிவுரையாளராக பணியாற்றி உள்ளேன். என் ஓவியங்கள், நாட்டின் பல மாநிலங்களில் உள்ள ஆர்ட் கேலரிகளில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
தற்போது, மாணவர்களுடன் இணைந்து, சமகால ஓவியங்கள் என்ற தலைப்பில், ஓவிய கண்காட்சியை நடத்துகிறோம்.
இதில், மாடு, கோழி உள்ளிட்ட கிராமியம் சார்ந்தும், இயற்கை சார்ந்தும், நகர வாழ்வியல் சார்ந்தும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.