/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரதான சாலை ஆக்கிரமிப்பு அசோக் நகரில் கடும் நெரிசல்
/
பிரதான சாலை ஆக்கிரமிப்பு அசோக் நகரில் கடும் நெரிசல்
பிரதான சாலை ஆக்கிரமிப்பு அசோக் நகரில் கடும் நெரிசல்
பிரதான சாலை ஆக்கிரமிப்பு அசோக் நகரில் கடும் நெரிசல்
ADDED : ஜன 24, 2025 12:31 AM

அசோக் நகர், நெசப்பாக்கம் - அசோக் நகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகளில் உள்ள வாகன ஆக்கிரமிப்பால், நெரிசல் நிலவி வருகிறது.
கோடம்பாக்ககம் மண்டலம், கே.கே., நகர், அசோக் நகர், விருகம்பாக்கம், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய பேருந்து சாலையாக, அண்ணா பிரதான சாலை மற்றும் அசோக் பில்லர் சாலை உள்ளது.
இச்சாலையில், கே.கே., நகர் மின்சார வாரிய அலுவலகம், கே.கே., நகர் பணிமனை, கே.கே.,நகர் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை, அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையம், அரசு பள்ளி, அம்மா உணவகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இருவழிப் பாதையாக உள்ள இச்சாலைகள், 35 அடி அகலம் கொண்டவை.
இச்சாலைகளின் இருபுறமும் சாலையை ஆக்கிரமித்து வேன்கள், லாரிகள், சிமென்ட் கலவை இயந்திரங்கள், வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், 'பீக் ஹவரில்' இச்சாலையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
அத்துடன், இடையூறின்றி சாலையில் ஒரு பகுதியை மட்டும் கட்டண வாகன நிறுத்தமாக மாற்றினால், தேவையற்ற ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியும்.

