ADDED : ஜூலை 18, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு, உயர் நீதிமன்றம் சார்பில், நேற்று மாலை பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் மூத்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பிரிவு உபசார உரை நிகழ்த்தினார். நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப் ஏற்புரையாற்றினார்.
தற்போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக குறைந்து, 17 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.