/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடத்தல் ஆடியோ வெறும் வதந்தி! போலீஸ் உதவி கமிஷனர் விளக்கம்
/
கடத்தல் ஆடியோ வெறும் வதந்தி! போலீஸ் உதவி கமிஷனர் விளக்கம்
கடத்தல் ஆடியோ வெறும் வதந்தி! போலீஸ் உதவி கமிஷனர் விளக்கம்
கடத்தல் ஆடியோ வெறும் வதந்தி! போலீஸ் உதவி கமிஷனர் விளக்கம்
ADDED : மார் 06, 2024 12:27 AM
அம்பத்துார், அம்பத்துார் அடுத்த புதுார் ஏரிக்கரை பகுதியில், நேற்று காலை இரண்டு சிறுவர்களை, முகமூடி அணிந்த சிலர் கடத்தி சென்றதாக, 'வாட்ஸாப்'பில் ஆடியோ வேகமாக பரவியது.
அதில் வரும் பெண் குரல், 'தன் கணவர் அம்பத்துார் காவல் நிலையத்தில், ஊர்க்காவல் படையில் இருக்கிறார். சிறுவர்கள் கடத்தப்பட்டது குறித்து, அவர் தான் எனக்கு தகவல் தெரிவித்தார்.
இதனால், அனைவரும் உஷாராக இருங்கள். உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள். வேலைக்கு செல்வோர், தங்கள் குழந்தைகளை நன்கு தெரிந்தவர்களிடம் ஒப்படைத்து செல்லுங்கள்' என பேசியிருந்தார்.
இந்த ஆடியோ, நேற்று காலை முதல் வேகமாக பரவியதால் சலசலப்பானது. இது குறித்து, அம்பத்துார் போலீசாரிடம் விசாரித்தபோது, 'அது போன்ற புகார் ஏதும் வரவில்லை. ஆனாலும் விசாரிக்கிறோம்' என்றனர்.
இந்த நிலையில், அம்பத்துார் போலீஸ் உதவி கமிஷனர் கிரி, மேற்கண்ட ஆடியோ பிரச்னை குறித்து மறுப்பு தெரிவித்து, நேற்று மாலை, ஆடியோ பதிவிட்டார்.
அதில் பேசியிருப்பதாவது:
காலை 7:30 மணி அளவில், அம்பத்துார், புதுார் ஏரிக்கரை பகுதியில், சிறுவர்கள் கடத்தப்பட்டதாக வாட்ஸாப் ஆடியோ மூலம் அறிந்தோம். இது குறித்து உடனடியாக விசாரிக்கப்பட்டது. அதில் உண்மையில்லை. எங்களது காவல் நிலைய எல்லைக்குட்டப்ப பகுதியில், எந்த சிறுவரும் கடத்தப்படவில்லை.
இது போன்ற ஆடியோக்களை வெளியிடுவோர் மீது, சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் குறித்தும் விசாரிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.
இவ்வாறு என்று பதிவிட்டிருந்தார்.

