/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹிந்துஸ்தான் பல்கலை அணிகள் ஐ.ஐ.டி., கூடைப்பந்தில் 'சாம்பியன்'
/
ஹிந்துஸ்தான் பல்கலை அணிகள் ஐ.ஐ.டி., கூடைப்பந்தில் 'சாம்பியன்'
ஹிந்துஸ்தான் பல்கலை அணிகள் ஐ.ஐ.டி., கூடைப்பந்தில் 'சாம்பியன்'
ஹிந்துஸ்தான் பல்கலை அணிகள் ஐ.ஐ.டி., கூடைப்பந்தில் 'சாம்பியன்'
ADDED : ஏப் 11, 2025 11:42 PM

சென்னை, சென்னை ஐ.ஐ.டி., கூடைப்பந்து போட்டியில், ஹிந்துஸ்தான் பல்கலை இருபாலர் அணிகளும் முதலிடங்களை பிடித்து அசத்தின.
கிண்டியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., சார்பில், விளையாட்டு போட்டிகள், கல்லுாரி வளாகத்தில் நடந்து வருகின்றன. கூடைப்பந்து போட்டியில், இருபாலரிலும் தலா நான்கு அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'லீக்' அடிப்படையில் நடத்தப்பட்டன.
ஆண்களுக்கான இறுதி லீக் போட்டியில், ஹிந்துஸ்தான் பல்கலை மற்றும் செயின்ட் ஜோசப் கல்லுாரி அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதலே ஹிந்துஸ்தான் அணியின் கை ஓங்கியது. முடிவில் 52 - 28 என்ற கணக்கில், ஹிந்துஸ்தான் பல்கலை அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது.
மூன்றாம் இடத்தை வி.ஐ.டி., பல்கலையும், நான்காம் இடத்தை சென்னை ஐ.ஐ.டி., அணியும் கைப்பற்றின.
பெண்களில் ஹிந்துஸ்தான் பல்கலை, 59 - 46 என்ற கணக்கில் செயின்ட் ஜோசப் கல்லுாரியை வீழ்த்தியது. அனைத்து போட்டிகள் முடிவில், ஹிந்துஸ்தான் பல்கலை முதலிடத்தையும், செயின்ட் ஜோசப் கல்லுாரி, வி.ஐ.டி., மற்றும் சென்னை ஐ.ஐ.டி., அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களை வென்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, அமலாக்கத்துறை முன்னாள் உதவி இயக்குனர் சந்திரசேகரன், ஐ.ஐ.டி., மாணவர்களின் தலைவர் சத்தியநாராயணன், விளையாட்டுத்துறை அலுவலர் எட்வின்புரோவ் பாக்யராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.