ADDED : நவ 10, 2025 01:28 AM

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.
சென்னை வருவாய் மாவட்ட ஹாக்கி போட்டி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி சார்பில், அண்ணா சாலையில் உள்ள மதரசா அரசு பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
போட்டியில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட மூன்று பிரிவுகளில், தனித்தனியாக நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும், தலா 23 அணிகள் பங்கேற்றன.
அனைத்து போட்டிகள் மு டிவில், மாணவர்களுக்கான 14 வயது பிரிவில், அடையார் குமாரராஜா முத்தையா பள்ளி முதலிடத்தையும், மாதவரம் மண்டலம் சின்னசேக்காடு அரசு பள்ளி இரண்டாமிடத்தையும், பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.
அதேபோல், 19 வயது பிரிவில், மதரசா அரசு பள்ளி, திரு.வி.க., நகர் ஐ.சி.எப்., சில்வர் ஜூப்ளி பள்ளி மற்றும் அம்பத்துார் வெங்கடேஸ்வரா பள்ளி அணிகள் முறையே, முதல் மூன்று இடங்களை கைப்பற்றின. அடுத்து, 17 வயது பிரிவில், மாதவரம் மண்டலம், சின்னச்சேக்காடு அரசு பள்ளி முதலிடத்தையும், கோடம்பாக்கம் அஞ்சுமன் பள்ளி இரண்டாமிடத்தையும், மதரசா அரசு பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
மூன்று பிரிவிலும் முதலிடங்களை பிடித்த அணிகளும், பிரிவுவாரியாக திருவண்ணாமலை, திருச்சி, ராணிபேட்டையில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.

