/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி - 20 கிரிக்கெட் காலிறுதிக்கு நெல்லை நாடார், டான்பாஸ்கோ தகுதி
/
டி - 20 கிரிக்கெட் காலிறுதிக்கு நெல்லை நாடார், டான்பாஸ்கோ தகுதி
டி - 20 கிரிக்கெட் காலிறுதிக்கு நெல்லை நாடார், டான்பாஸ்கோ தகுதி
டி - 20 கிரிக்கெட் காலிறுதிக்கு நெல்லை நாடார், டான்பாஸ்கோ தகுதி
ADDED : நவ 10, 2025 01:29 AM
சென்னை: எம்.ஆர்.எப்., டி - 20 கிரிக்கெட் போட்டியில், நெல்லை நாடார் மற்றும் டான்பாஸ்கோ பள்ளி அணிகள் காலிறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்றன.
எம்.சி.சி., பள்ளி எம்.ஆர்.எப்., நிறுவனம் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான டி - 20 கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகின்றன. மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த போட்டிகள், மீண்டும் துவங்கியுள்ளன.
நேற்று முன்தினம், காலிறுதிக்கு முந்தைய ஆட்டம், சேத்துப்பட்டில் நடந்தது. முதல் போட்டியில், கொட்டிவாக்கம் நெல்லை நாடார் மற்றும் கொரட்டூர் எபினேசர் பள்ளிகள் மோதின.
'டாஸ்' வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த நெல்லை நாடார் அணி, எபினேசர் அணியை, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு, 121 ரன்களில் கட்டுப்படுத்தியது. பின் களமிறங்கிய நெல்லை நாடார் அணி, 17.3 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து, 125 ரன்களை அடித்து வெற்றி பெற்று, காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில், டான்பாஸ்கோ மற்றும் ஹார்ட்புல்னஸ் சர்வதேச பள்ளிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஹார்ட்புல்னஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சில், டான்பாஸ்கோ அணி 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து, 142 ரன்கள் குவித்தது. இலக்கை நோக்கி போராடிய ஹார்ட்புல்னஸ் அணி, 20 ஓவர்களை நிறைவு செய்தும், 8 விக்கெட்டுகளை இழந்து, 122 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்விஅடைந்தது.
இதன் மூலம், டான்பாஸ்கோ அணி சிறப்பான வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

