ADDED : பிப் 05, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பியம்:பெரம்பூர், செம்பியம், மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத், 62; துணிக்கடை சூப்பர்வைசர்.
இவர், நேற்று முன்தினம் வேலைக்குச் சென்று, இரவு 9:45 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, 42 அங்குல 'எல்.இ.டி., டிவி'யைக் காணவில்லை.
சந்தேகத்தின்படி வீட்டை சுற்றிப் பார்த்த போது, வீட்டின் பின்புற ஜன்னல் கம்பிகள் அகற்றப்பட்டு இருந்தன.
உள்ளே இருந்த காலி சமையல் காஸ் சிலிண்டர், தண்ணீர் மோட்டார் 'பம்ப்', பித்தளை பாத்திரங்கள், பீரோவில் வைத்திருந்த 5,000 ரூபாய் மற்றும் 2 சவரன் தாலி சங்கிலி ஆகியவையும் திருடு போனது தெரிந்தது.
புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

