/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியோருக்கு வீட்டிலேயே சிகிச்சை: காவேரியில் அறிமுகம்
/
முதியோருக்கு வீட்டிலேயே சிகிச்சை: காவேரியில் அறிமுகம்
முதியோருக்கு வீட்டிலேயே சிகிச்சை: காவேரியில் அறிமுகம்
முதியோருக்கு வீட்டிலேயே சிகிச்சை: காவேரியில் அறிமுகம்
ADDED : நவ 21, 2024 12:20 AM
சென்னை,
மருத்துவமனைக்கு வர முடியாத முதியோரின் வீடுகளுக்கே சென்று, மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டத்தை, காவேரி மருத்துவமனை துவங்கியுள்ளது.
இதுகுறித்து, காவேரி மருத்துவ குழும செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
நம் நாட்டில் முதியோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, மருத்துவமனைக்கு வர முடியாத முதியோருக்காக, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது
அதன்படி, வீடுகளுக்கே மருத்துவ குழுவினர் சென்று, 'இ.சி.ஜி.,' ரத்த பரிசோதனை, சிறுநீர் பகுப்பாய்வு, ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்வர். மேலும் டாக்டர்கள், மருத்துவ ஆலோசனையையும் வழங்க உள்ளனர்.
வி.எஸ்.நடராஜன் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் நடராஜன், இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த மருத்துவ குழுவில் முதுமை நல டாக்டர், இயன்முறை சிகிச்சை நிபுணர், உளவியல் டாக்டர், உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து நிபுணர், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

