/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையின் நடுவே மனைவியின் மண்டையை உடைத்த கணவன்
/
சாலையின் நடுவே மனைவியின் மண்டையை உடைத்த கணவன்
ADDED : நவ 20, 2025 03:19 AM
போரூர்: போரூர் அருகே, கள்ளக்காதலனுடன் பேருந்து ஏற வந்த மனைவியின் தலையில் சுத்தியலால் அடித்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை, கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 56. இவரது மனைவி சுலோச்சனா, 55. இருவரும், போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மாலை, சொந்த ஊர் செல்வதற்காக, போரூர் சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தத்தில் ராஜா நின்றிருந்தார்.
அப்போது, அவரின் மனைவி சுலோச்சனா, வேறொரு நபருடன் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்ததை பார்த்து ஆத்திரமடைந்த ராஜா, மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த ராஜா, பையில் வைத்திருந்த சுத்தியை எடுத்து, மனைவியின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில், சுலோச்சனாவின் மண்டை உடைந்து, ரத்தம் கொட்டியது.
இதையடுத்து, சுலோச்சனாவுடன் வந்த நபர் ராஜாவை சரமாரியாக தாக்கியதில், அவரும் காயம் அடைந்து மயங்கினார். அங்கிருந்தவர்கள், இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து வானகரம் போலீசார் விசாரித்தனர். அதில், சுலோச்சனாவிற்கு வேதநாயகம் என்பருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதை ராஜா கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

