/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு சந்தைக்கு திராட்சை வரத்து அதிகரிப்பு
/
கோயம்பேடு சந்தைக்கு திராட்சை வரத்து அதிகரிப்பு
ADDED : ஜன 26, 2025 03:20 AM

சென்னை:தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், பலவகை திராட்சை பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
ஜனவரியில் திராட்சை பழங்களின் சீசன் துவங்குவது வழக்கம். தமிழகத்தில், தேனி, திண்டுக்கல், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், திராட்சை சாகுபடி அதிகம் நடந்து வருகிறது.
தற்போது, சீசன் துவங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, கோயம்பேடு சந்தைக்கு திராட்சை பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்தும் வரத்து மெல்ல அதிகரித்து வருகிறது.
மொத்த விற்பனையில், ஒரு கிலோ பச்சை திராட்சை 100 ரூபாய்க்கும், கொட்டையில்லாத கறுப்பு திராட்சை, 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வரும் நாட்களில் வரத்து அதிகரிக்கும் என்பதால், விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. திராட்சை பழங்கள் வரத்து அதிகரிப்பால், சென்னையில் உள்ள சந்தைகள் மட்டுமின்றி, சாலையோர கடைகள், தள்ளுவண்டிகளில் குவித்து வைத்து அவை விற்கப்படுகின்றன.