/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லவாரம் தாலுகாவிலும் குறுவட்டங்கள் அதிகரிப்பு
/
பல்லவாரம் தாலுகாவிலும் குறுவட்டங்கள் அதிகரிப்பு
ADDED : மே 04, 2025 12:13 AM
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தாலுகா பல்லாவரம் வருவாய் குறுவட்டத்தில், ஒன்பது கிராமங்களும், பம்மல் வருவாய் குறுவட்டத்தில், நான்கு வருவாய் கிராமங்களும் 13 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு 6,38,508 மக்கள் உள்ளனர்.
தற்போது பல்லாவரத்தில் தாசில்தார், தலைமையிடத்து துணை தாசில்தார், தேர்தல் துணை தாசில்தார் ஆகிய பணியிடங்கள் உள்ளன. மண்டல துணை தாசில்தார் பணியிடம் இல்லை.
பல்லாவரம் தாலுகா அலுவலகத்திற்கு, புதிதாக மண்டல துணை தாசில்தார் பணியிடம் உருவாக்கும் வகையில், வருவாய் ஆய்வாளர் நான்கு பேர், குறுவட்ட நில அளவையர் நான்கு பேர், கிராம நிர்வாக அலுவலர் நான்கு பேர், கிராம உதவியாளர்கள் மூன்று பேர், அலுவலக உதவியாளர்கள் நான்கு பேர் என 19 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
பல்லாவாரத்தில் நான்கு குறுவட்டங்கள், மூன்று கிராமங்கள் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம், அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது.