/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உலக காலணி சந்தையில் இந்திய நிறுவனம் வாக்மேட்
/
உலக காலணி சந்தையில் இந்திய நிறுவனம் வாக்மேட்
ADDED : டிச 26, 2024 12:29 AM
சென்னை, காலணிகள் உற்பத்தி செய்யும், 'வாக்மேட் இந்தியா' நிறுவனம், அதன் புதிய வகை காலணிகளை, துபாயில் அறிமுகப்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் மைசூரை தலைமையகமாக வைத்து, 2017 முதல் இயங்கி வரும், இந்நிறுவனம் தற்போது உலக சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளது.
இந்நிறுவனத்தின் விளம்பர துாதராக, இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் உள்ளார். அவர் துபாய் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அறிமுகப்படுத்தப்பட்ட காலணிகளில், நவீன 'இன்சோல் தொழில்நுட்பம்' பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது, கால்களுக்கு வலுவான பிடிமானம், சரிசமமாக எடை தாங்கும்திறன், அதிர்வுகள் இல்லாத உணர்வை ஏற்படுத்துகிறது.
கால் வலி, அசவுகரியங்கள் இல்லாமல், சொகுசான நடைபயணத்தை வழங்குகிறது.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 'ஹீல் கப்' கால்களுக்கு ஆதரவளித்து, நிலையாக நடக்க உதவுகிறது.
நம்பகமான, ஸ்டைலான, நீடித்து உழைக்கும், விலை குறைந்த காலணிகளை உற்பத்தி செய்வதில், உறுதியாக உள்ளோம் என, 'வாக்மேட்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

