/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் பாட்டிலால் குத்தி ஓட்டுனர் தற்கொலை
/
போதையில் பாட்டிலால் குத்தி ஓட்டுனர் தற்கொலை
ADDED : பிப் 14, 2024 12:58 AM
குன்றத்துார்,மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தாமஸ், 42; கார் ஓட்டுனர். இவரது மனைவி ரம்யா, 32. தம்பதி இடையே ஏற்பட்ட தகராறால், ரம்யா கோபித்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை தாமஸ் வீட்டின் வெளியே, மது பாட்டிலை உடைத்து இடது கையில் குத்தி, ரத்தம் வெளியாகி இறந்து கிடந்தார். மணிமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணத்திற்கு வேறு காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.
எண்ணுார், காசிகோவில் குப்பத்தை சேர்ந்தவர் ராகேஷ் சர்மா, 39; வெல்டிங் தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். நேற்று அதிகாலை வீட்டில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

