/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி பேருந்து நிலையத்தில் இலவச குடிநீர் வழங்கப்படுமா?
/
ஆவடி பேருந்து நிலையத்தில் இலவச குடிநீர் வழங்கப்படுமா?
ஆவடி பேருந்து நிலையத்தில் இலவச குடிநீர் வழங்கப்படுமா?
ஆவடி பேருந்து நிலையத்தில் இலவச குடிநீர் வழங்கப்படுமா?
ADDED : மார் 08, 2024 12:26 PM
ஆவடி, ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து, கோயம்பேடு, தாம்பரம், திருவள்ளூர், திருவேற்காடு, பூந்தமல்லி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல, பெரியபாளையம், கீழ் கொண்டையார், வெள்ளனுார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, தினமும் 140 முதல் 150 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இங்கு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் பல்வேறு அரசு சேவைகளை பெறுவதற்காக வரும் முதியோர் உட்பட, நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க., ஆட்சியில் ஆவடி பேருந்து நிலையத்தில் குறைந்த விலையில் பயணியருக்கு 'அம்மா' குடிநீர் விற்கப்பட்டன.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், அம்மா குடிநீர் கவுன்டர்கள் மூடப்பட்டன. இதனால், பயணியர் குடிநீருக்காக திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக விலைக்கு, குடிநீர் வாங்கி பருகும் அவல நிலை உள்ளது. குறிப்பாக, கோடைக் காலத்தில் குடிநீர் தேவை அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, பயணியருக்கு இலவச குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

