/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
/
4 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
ADDED : மார் 17, 2024 01:09 AM

சென்னை:அடையாறு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட, 10 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பொதுமக்களிடம் போலீஸ்காரர்கள் கனிவுடன் பேசுதல், வழக்கு ஆவணங்களை முறையாக பராமரித்தல், வழக்குகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்தல், உள்ளிட்ட 20 நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இதை அடிப்படையாக வைத்து, 'குஸ்ட் சான்றிதழ்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கார்த்திகேயன் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். அவர், 'குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா'வின் தரக்கட்டுப்பாட்டிற்கான அனைத்து அடிப்படைகளையும் ஆய்வு செய்தபின், காவல் நிலையத்திற்கு தரச்சான்றிதழ்களை வழங்கினார்.
இதில், கிண்டி, வேளச்சேரி, நீலாங்கரை, தரமணி ஆகிய நான்கு காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.

