/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரிக்கெட் மைதானத்தில் ஐ.டி., ஊழியர் உயிரிழப்பு
/
கிரிக்கெட் மைதானத்தில் ஐ.டி., ஊழியர் உயிரிழப்பு
ADDED : பிப் 09, 2025 10:12 PM
சைதாப்பேட்டை:திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 25. தி.நகரில் தங்கி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம், அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதையொட்டி, ஊழியர்கள் சேர்ந்து, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடத்தினர். இதில், கார்த்திக் பங்கேற்றார்.
உடல்நலம் பாதித்ததால், விளையாடாமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. போட்டி முடிந்து வெற்றி கொண்டாட்டத்தின்போது, கார்த்திக் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார்.
நந்தனத்தில், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கார்த்திக், நேற்று, சிகிச்சை பலனின்றி பலியானார். சைதாப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.
சிறு வயதில் இருந்து 'வீசிங்' பிரச்னை இருந்துள்ளது. அதிக பனி காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கார்த்திக பலியானதாக, போலீசார் கூறினர்.

