/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய நீச்சல் 'டைவிங்' போட்டி ஜெயின் பல்கலை 'சாம்பியன்'
/
தேசிய நீச்சல் 'டைவிங்' போட்டி ஜெயின் பல்கலை 'சாம்பியன்'
தேசிய நீச்சல் 'டைவிங்' போட்டி ஜெயின் பல்கலை 'சாம்பியன்'
தேசிய நீச்சல் 'டைவிங்' போட்டி ஜெயின் பல்கலை 'சாம்பியன்'
ADDED : டிச 27, 2024 08:51 PM

சென்னை:இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலை நீச்சல் மற்றும் டைவிங் போட்டிகள், நிறைவடைந்தன.
போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் டி.ஆர்., பாரிவேந்தர் நீச்சல் குளத்தில் நடந்தது.
இதில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பல்கலை போட்டிகளில் வெற்றி, 1,200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
இறுதி நாளான நேற்று, 200 மீ., 'பேக்ஸ்டோக்' பிரிவில், சென்னை எஸ்.ஆர்.எம்., வீரர் நித்திக் நாதெல்லா தங்கமும், பஞ்சாப் லவ்லி பல்கலையின் பிக்கினா சாய் நிஹார் வெள்ளியும் வென்றனர்.
அதேபிரிவில், பெண்களில் புவனேஸ்வர் உட்கல் பல்கலையின் பிரத்யசாரே தங்கமும், பெங்களூரு ஜெயின் பல்கலை ஷ்ருங்கி ராஜேஷ் வெள்ளியும் வென்றனர்.
* 'மெட்லி 4*100 மீ., ரிலே' கலப்பு பிரிவில், சண்டீகர் பல்கலை தங்கமும், சென்னை பல்கலை வெள்ளியும், பெங்களூரு ஜெயின் பல்கலை வெண்கலமும் வென்றன.
ஆண்களுக்கான 4*100 ப்ரீஸ்டைல் ரிலேவில், பெங்களூரு ஜெயின் பல்கலை முதலிடமும், தமிழகம் அண்ணா பல்கலை இரண்டாமிடத்தையும், சென்னை பல்கலை மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
அனைத்து போட்டிகள் முடிவில், ஆண்களில் பெங்களூரு ஜெயின் பல்கலை 137 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாம் இடத்தை, புனே சாவித்ரி பாய் பல்கலை அணி கைப்பற்றியது. பெண்களிலும், ஜெயின் பல்கலை 185 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாம் இடத்தை, அண்ணா பல்கலை அணி வென்றது.