/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
16ல் ஜே.பி., கல்சுரல்ஸ் இசை நிகழ்ச்சி
/
16ல் ஜே.பி., கல்சுரல்ஸ் இசை நிகழ்ச்சி
ADDED : ஆக 14, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஜே.பி., கல்சுரல் பவுண் டேஷன் சார்பில், ஜே.பி.,யின் 'நெஞ்சில் நிறைந்தவை' பாகம் - 6 என்ற தலைப்பில், இசை நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் காலத்துடன் பயணிக்கும் காவிய பாடல்கள் பாடப்படும்.
இதில், முக்கிய பாடகர் களாக முகேஷ் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோருடன் பாடகர்கள் சந்திரசேகர், வெங்கடேஷ், சபிதா, அனுஷா ஆகியோர் பங்கேற்று, பாட உள்ளனர்.
இசை நிகழ்ச்சி, வரும் 16ம் தேதி, சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில், தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நடக்கிறது. அனைவரும் பங்கேற்கலாம்.