/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுநீரக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
/
சிறுநீரக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 02, 2025 10:22 AM

சென்னை; ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கத்தில் அமைந்துள்ள க்யூரி மருத்துவமனையில் பள்ளி கல்லூரிகள் மற்றும் பொது மக்களுக்கு சிறுநீரக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறது.
இந்த முகாமில் சிறுநீரக ஆரோக்கியம் மற்றும் ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறிதல் குறித்து விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.
முதல் கட்டமாக இன்டர் ஸ்கூல் ஓவியப்போட்டியுடன் 2 வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு படைப்புகளை உருவாக்கினர்.
புகழ்பெற்ற கலைஞர்கள் சீதா ரவி லட்சுமிபத்ரி மற்றும் க்யூரி மருத்துவமனையின்சிறுநீரக டாக்டர்கள் இணைந்து நடுவர் குழுவினராக இருந்து மாணவரின் படைப்பாற்றலையும் ஆரோக்கியம் குறித்த கட்டுரை தேர்வு செய்தனர்.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான இலவச சிறுநீரக பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடத்தப்பட்டன. பள்ளி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக ரீல்ஸ் போட்டி நடத்தப்பட்டது. டயாலிஸிஸ், சிறுநீரக மாற்றம் குறித்து தலைப்புகளில் மாணவர்கள் ரீல்ஸ்களை உருவாக்கினர்.
திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜா கீர்த்தனா மற்றும் க்யூரி மருத்துவமனை டாக்டர்கள் சிறப்பு நடுவர் குழுவாக பங்கேற்றனர்.
சிறுநீரக துறை டாக்டர் அஜய் ரதோன் கூறுகையில்; 'சிறுநீரக ஆரோக்கிய விழிப்புணர்வு பள்ளிகளில் இருந்து துவங்க வேண்டும்.ரத்தஅழுத்தம், சிறுநீர் புரோட்டின், கிரியோட்டினை குறிப்பிட்ட அளவை பராமரித்து சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்'என்றார்.