ADDED : ஏப் 24, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, ரவுடிகளை கட்டுப்படுத்தவும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில், போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்த வகையில், தனிப்படை போலீசார் நடத்திய தேடுதலில், கத்தியுடன் உலா வந்த புளியந்தோப்பைச் சேர்ந்த நந்தகுமார், 25, என்பவரை கைது செய்த போலீசார் 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து 'டோலு' செல்வகுமார், 26, ஜெயக்குமார், 22, ஆகிய இருவரையும் கைது செய்து, கத்தியுடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல, ஓட்டேரி போலீசார் நடத்திய தேடுதலில், திலக்ராஜ், 23, 'பரோட்டா' சீனி, 20, ராசய்யா, 40, ஆகிய, மூவரை கைது செய்தனர்.
மேலும், புளியந்தோப்பு ஆடுதொட்டி உள்ளே வைத்து, ரமேஷ், 35, குபேந்திரன், 35, ஆகிய, இருவரை, புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர்.

