/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பின்றி கோயம்பேடு ரவுண்டானா
/
பராமரிப்பின்றி கோயம்பேடு ரவுண்டானா
ADDED : டிச 30, 2024 01:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு: கோயம்பேடு மேம்பாலத்தில், தே.மு.தி.க., அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவின் கீழே, கட்டட கழிவுகள் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தன.
நம் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, கட்டட கழிவுகள் அகற்றப்பட்டு, பூங்கா, செயற்கை நீரூற்று ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அப்பகுதி பராமரிப்பின்றி, முட்புதர் சூழ்ந்து கருவேலங் காடு போன்று காட்சியளிக்கிறது. முறையாக பராமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.