/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் பைனலுக்கு குமார் சி.சி., தகுதி
/
'லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் பைனலுக்கு குமார் சி.சி., தகுதி
'லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் பைனலுக்கு குமார் சி.சி., தகுதி
'லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் பைனலுக்கு குமார் சி.சி., தகுதி
ADDED : ஏப் 19, 2025 11:44 PM
சென்னை,சென்னை புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், ஸ்ரீகுரு ராகவேந்திராசாமி லீக் மற்றும் நாக் அவுட் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
பல்வேறு மண்டலங்களில், தலா ஒன்பது அணிகள் பங்கேற்று, ஒவ்வொரு அணிகளும் எட்டு போட்டிகள் வீதம் 'லீக்' முறையில் மோதி வருகின்றன.
இதில், 'கே' மண்டல பிரிவில், இரண்டாம் அரையிறுதி போட்டி, சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.
போட்டியில், யூனிகான்ஸ் சி.சி., மற்றும் குமார் சி.சி., அணிகள் எதிர்கொண்டன. டாஸ் வென்ற யூனிகான்ஸ் அணி, முதலில் பேட்டிங் செய்து, 17.3 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 132 ரன்களை அடித்தது.
அடுத்து களமிறங்கிய குமார் சி.சி., அணி, அதே 17.3 ஓவர்களில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 136 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால், இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
இதற்கு முன் நடந்த முதல் அரையிறுதியில், வால்வரின்ஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்கக்கது. விரைவில், வால்வரின்ஸ் - குமார் சி.சி., அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

