/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சந்தான சீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம்
/
சந்தான சீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 21, 2025 01:54 AM
முகப்பேர்:அண்ணா நகர் முகப்பேரில், சந்தான சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி வெங்கடாசலபதியை போன்ற தோற்றம் கொண்ட மூலவர் சிலை இருப்பது கோவிலின் சிறப்பம்சம். இங்கு, தாயார், ஆஞ்சநேயர், ஆண்டாள், விநாயகர், அய்யப்பன் ஆகியோர், தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருக்கின்றனர்.
கடந்த 2009ம் ஆண்டு கோவிலில் கும்பாபிேஷக விழா நடந்தது. சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்த நிலையில், கும்பாபிேஷக ஏற்பாடுகள் நடந்தன. கடந்த 17ம் தேதி, கும்பாபிேஷக விழா துவங்கியது.
நேற்று காலை யாக பூஜை, கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, காலை 9:10 மணியளவில் கலச புறப்பாட்டை தொடர்ந்து, ராஜ கோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் விமரிசையாக நடந்தது.
அப்போது பக்தர்கள், 'கோவிந்தா... கோவிந்தா...' என கோஷம் எழுப்பிய பரவசமடைந்தனர். அனைவரு மீதும் கலச தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
மதியம், மூலவர் சந்தான சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவ வைபவமும், மாலை 6:00 மணிக்கு, வீதி உலாவும் நடந்தது. இதில், 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

