ADDED : மார் 17, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அடையாறு, மல்லிப்பூ நகரைச் சேர்ந்தவர் யோவான், 28. திருவான்மியூரில் உள்ள மூன்று சிறுமியருக்கு சாக்லெட் வாங்கிக் கொடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
நீலாங்கரை மகளிர் போலீசார், கடந்த மாதம், 3ம் தேதி யோவானை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று, குண்டர் சட்டத்தில் இவரை கைது செய்ய, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவிட்டார்.

