/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆசைக்கு இணங்காததால் திருநங்கை மண்டை உடைப்பு
/
ஆசைக்கு இணங்காததால் திருநங்கை மண்டை உடைப்பு
ADDED : பிப் 17, 2025 01:24 AM
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் சசிகலா, 49; திருநங்கை. இவர், வீட்டின் அருகில் உள்ள கோவிலில் பூசாரியாகவும், அப்பகுதியில் டேங்கர் லாரியில் தண்ணீர் வினியோகம் செய்தும் வந்துள்ளார்.
புளியந்தோப்பு, திரு.வி.க., நகரைச் சேர்ந்த இம்ரான், 27, என்பவர், சசிகலாவை தகாத உறவுக்கு அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த சசிகலாவை, தகாத உறவுக்கு இம்ரான் மீண்டும் அழைத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து சசிகலா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த இம்ரான், அங்கிருந்த கல்லை எடுத்து, சசிகலாவின் தலையில் ஓங்கி அடித்து தப்பினார். அங்கிருந்தோர், சசிகலாவை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சசிகலாவின் பின்பக்க தலையில் நான்கு தையல் போடப்பட்டது.
மருத்துவமனை தகவலின்படி, புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள இம்ரானை தேடி வருகின்றனர்.