/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் உண்டியலில் விழுந்த 'ஐபோன்' திரும்ப ஒப்படைக்க சட்ட ஆலோசனை அமைச்சர் சேகர்பாபு
/
கோவில் உண்டியலில் விழுந்த 'ஐபோன்' திரும்ப ஒப்படைக்க சட்ட ஆலோசனை அமைச்சர் சேகர்பாபு
கோவில் உண்டியலில் விழுந்த 'ஐபோன்' திரும்ப ஒப்படைக்க சட்ட ஆலோசனை அமைச்சர் சேகர்பாபு
கோவில் உண்டியலில் விழுந்த 'ஐபோன்' திரும்ப ஒப்படைக்க சட்ட ஆலோசனை அமைச்சர் சேகர்பாபு
ADDED : டிச 22, 2024 12:16 AM
மாதவரம், ''திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியலில், தவறுதலாக விழுந்த பக்தரின் 'ஐபோன்' திரும்ப ஒப்படைப்பது குறித்து சட்ட ஆலோசனை நடத்தப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அம்பத்துாரைச் சேர்ந்த தினேஷ் என்பவர், கடந்த ஆகஸ்டில் தரிசனம் செய்ய வந்துள்ளார்.
அப்போது, தன்னுடைய 'ஐபோன் 13புரோ' ரக மொபைல் போனை, தவறுதலாக காணிக்கை உண்டியலில் போட்டுள்ளார். அதன் பின், கோவில் நிர்வாகத்திடம் நடந்ததைக் கூறி, மொபைல்போனை திரும்பக் கேட்டுள்ளார்.
அதற்கு கோவில் நிர்வாகத்தினர், 'கோவில் உண்டியலில் செலுத்தப்படும் அனைத்தும் சுவாமிக்கு சொந்தம்' என, மொபைல் போன் வழங்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், அதிகாரிகள் முன்னிலையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அப்போது, தினேஷ் மொபைல் போனும் எடுக்கப்பட்டது.
கோவில் நிர்வாகம், சிம் கார்டை மட்டும் அவரிடம் வழங்கி, மொபைல் போனை பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டியது.
சென்னை, மாதவரம் நடேசன் நகரில் பழமையான மாரியம்மன் கோவிலில் 1.30 கோடி ரூபாயில் துவங்கவுள்ள சீரமைப்பு பணி; கைலாசநாதர் கோவிலில், 2.22 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் குளம் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், ''திருப்போரூர் முருகன் கோவிலில் உண்டியலில் விழுந்த பக்தரின் 'ஐபோன்' வழங்குவது குறித்து துறை ரீதியாக விதிவிலக்கு இருக்கிறதா என்று சட்டப்படி ஆராய்ந்து, சாத்தியக்கூறு இருந்தால், சம்பந்தப்பட்ட நபரிடம் வழங்கப்படும்,'' என்றார்.