/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எட்டு நாள் குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சை
/
எட்டு நாள் குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சை
ADDED : ஜூலை 17, 2025 12:28 AM
சென்னை, பிறந்து எட்டு நாட்களே ஆன பெண் குழந்தைக்கு, உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்து, எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மறுவாழ்வு அளித்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனையின் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சரவண பாலாஜி, என்.பிரதிபா ஆகியோர் கூறியதாவது:
பிரசவத்துக்கு முந்தைய ஸ்கேனில், குழந்தையின் வயிற்றுக்குள் நீர்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தை பிரசவத்துக்கு பின், கூடுதல் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அதில், கருப்பையை ஏதோ ஒன்று முறுக்குவதற்கான அறிகுறிகள் இருந்தன. குறிப்பாக, இடது பக்கத்தில் குடலிறக்க மாற்றங்களுடன், முறுக்கப்பட்ட கருப்பை நீர்க்கட்டி இருந்தது.
பிறந்த குழந்தையிடம் இவை அரிதானது என்றாலும், உடனடி சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
'லேப்ராஸ்கோபிக்' உதவியுடன் குறைந்தபட்ச ஊடுருவல் முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது குழந்தை நலமுடன் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.