/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.டி., தமிழ் சேனலில் 'மகாகவி பாரதி' தொடர்
/
டி.டி., தமிழ் சேனலில் 'மகாகவி பாரதி' தொடர்
ADDED : ஜன 21, 2024 12:00 AM
சென்னை, .டி., தமிழ் சேனலில் இன்று முதல், 'மகாகவி பாரதி' என்ற பெயரில் பாரதியின் வரலாற்று நெடுந்தொடர், ஞாயிறுதோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பத்திரிகையாளர், சுதந்திர போராட்ட வீரர், 20ம் நுாற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞர் எனும் பன்முகம் கொண்டவர் பாரதியார். அவரின் வாழ்க்கை வரலாற்றை இசைக்கவி ரமணன் எழுதி, பாரதியாராக நடிக்க, பிரபல இயக்குனர் லதா கிருஷ்ணா, 'மகாகவி பாரதியார்' என்ற பெயரில் தொலைக்காட்சி தொடராக இயக்கி உள்ளார்.
தொடருக்கான பாடல்களை, பாரதியாரின் எள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி இசையமைத்து பாடியுள்ளார். பாரதியாருடன் பழகிய, பலரும் அறியாத சுவாமிநாத சர்மா உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளன.
இதில், நவீன்குமார், தீபிகா, தர்மா, ஒய்.ஜி.மகேந்திரா, 'காத்தாடி' ராமமூர்த்தி, லோகேஷ் நடராஜன், இளங்கோ குமணன், முத்துக்குமரன், சுப்பினி, கிருத்திகா சுராஜித், யதுகிரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.