தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பிரதான சாலையில் திடீர் பள்ளம் எம்.ஜி.ஆர்., நகரில் மீண்டும் அதிர்ச்சி

பிரதான சாலையில் திடீர் பள்ளம் எம்.ஜி.ஆர்., நகரில் மீண்டும் அதிர்ச்சி

பிரதான சாலையில் திடீர் பள்ளம் எம்.ஜி.ஆர்., நகரில் மீண்டும் அதிர்ச்சி


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆர்.: இரண்டாண்டுகளுக்கு முன், 2.20 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி கள் மேற்கொள்ளப்பட்டும், எம்.ஜி.ஆர்., நகர், அண்ணா பிரதான சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது, வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் அசோக் நகரை இணைக்கும் அண்ணா பிரதான சாலை, இருபுறம் தலா 35 அடி அகலம் உடையது.

இச்சாலையின் கீழ், 20 அடி ஆழத்தில், நெசப் பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும், 750 மி.மீ., விட்ட முடைய, கழிவுநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, மண் அரிப்பு ஏற்பட்டு அண்ணா பிரதான சாலையில், கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு வந்தன. குறிப் பாக, 2015ல் பெரிய கிணறு போன்ற பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவும், கழிவு நீர் குழாயின் அழுத்தத்தை குறைக்கவும், 2.20 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டாண்டுகளுக்கு முன், மாற்றுப் பாதையில் இன்னொரு கழிவுநீர் குழாய் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே, நேற்று மீண்டும் சாலை உள்வாங்கி 5 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படாதபடி, உடனடியாக பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, சீரமைப்பு பணியில் குடிநீர் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us