ADDED : ஜூலை 21, 2025 03:22 AM

தேனாம்பேட்டையில், 6.5 கோடி ரூபாய் செலவில் மாம்பலம் கால்வாய் சீரமைக்கப்பட்டு வருகிறது.
தேனாம்பேட்டை மண்டலத்தில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த காலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில், புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைத்து வருவதோடு, அப்பகுதி கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, 3 கி.மீ., நீளம் உடைய மாம்பலம் கால்வாயில் விடுபட்ட இடங்களில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியும், வாகனங்களை இறக்கி கால்வாயை சுத்தம் செய்வதற்காக சாய்வு தளம் அமைக்கும் பணியும் மட்டுமின்றி துார்வாரி சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
மாநகராட்சி அதிகாரி கூறுகையில், 'வித்யோதயா பிரதான சாலை சந்திப்பு முதல் வெங்கட் நாராயணா சாலை சந்திப்பு வரையிலான மாம்பலம் கால்வாயை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இப்பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.