/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவனிடம் கத்திமுனையில் 'ஜிபே'யில் பணம் பறித்தோர் கைது
/
சிறுவனிடம் கத்திமுனையில் 'ஜிபே'யில் பணம் பறித்தோர் கைது
சிறுவனிடம் கத்திமுனையில் 'ஜிபே'யில் பணம் பறித்தோர் கைது
சிறுவனிடம் கத்திமுனையில் 'ஜிபே'யில் பணம் பறித்தோர் கைது
ADDED : ஏப் 06, 2025 12:15 AM

சென்னை. கே.கே.நகரில் 17 வயது சிறுவனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 'ஜிபே'யில் பணம் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
வடபழநி, ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது, 17 வயது மகன் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி காலை, கிரிக்கெட் விளையாடுவதற்காக கே.கே.நகர் மாநகராட்சி பூங்காவிற்கு சென்றார். அங்கு வந்த இரண்டு இளைஞர்கள், கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
தன்னிடம் பணம் ஏதும் இல்லை என, சிறுவன் பதில் அளித்துள்ளார். உடனே, மொபைல் போனில் உள்ள, 'ஜிபே' எனும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை 'ஆப்' வாயிலாக, தங்களது கணக்கிற்கு பணம் அனுப்ப வற்புறுத்தி உள்ளனர். இல்லையேல் குத்தி விடுவோம் என, கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.
அச்சமடைந்த சிறுவன், தன் வங்கி கணக்கில் இருந்த, 9,000 ரூபாயை 'ஜிபே' வாயிலாக, பணம் பறிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவரது கணக்கிற்கு அனுப்பி உள்ளார். இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டி சென்றனர்.
இது குறித்து சிறுவன், தன் தந்தையிடம் கூறியுள்ளார். அவர் கே.கே.நகர் காவல் நியைலத்தில் புகார் அளித்தார். பணம் அனுப்பப்பட்ட 'ஜிபே' எண்ணை வைத்து விசாரித்ததில், கே.கே.நகர், திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த அபிஷேக், 24, சதீஷ், 21, ஆகியோர், சிறுவனிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும், பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.