ADDED : ஜூன் 03, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த, 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த, 19 வயது வாலிபரை, போக்சோ சட்டத்தின் கீழ், திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் ஜாமினில் வெளியே வந்த வாலிபர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். வாலிபருக்கு, 2021 ஆக,, 17ல், 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நிலையில், ஒடிசாவில் பதுங்கியிருந்த வாலிபரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை நேற்று சிறையில் அடைத்தனர்.