/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நோயாளி போல் நடித்து மொபைல் திருடியவர் கைது
/
நோயாளி போல் நடித்து மொபைல் திருடியவர் கைது
ADDED : ஜன 31, 2024 12:12 AM

புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராஜா கடையைச் சேர்ந்தவர் சரவணகுமார், 30; இவர் புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ரத்தம் பரிசோதனை நிலையம் வைத்துள்ளார்.
இவரது நிலையத்திற்கு, நேற்று தண்டையார்பேட்டை, சிவாஜி நகரைச் சேர்ந்த ராஜேஷ், 22, என்பவர் ரத்த பரிசோதனைக்கு வந்தார். அப்போது, பெண் ஊழியர் ரத்த மாதிரிகளை எடுத்து விட்டு அறைக்கு சென்ற போது, ராஜேஷ் அங்கிருந்த மூன்று மொபைல் போன்களை திருடி விட்டு தப்பினார்.
இதுகுறித்து, வழக்குப் பதிந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நேற்று ராஜேஷை கைது செய்தனர்.
ஏற்கனவே, பொருட்கள் வாங்குவது போல் நடித்து, மொபைல் போன்கள் திருடியதாக, ராஜேஷ் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.